கல்லியூர் பகுதியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சுமார் 2மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 August 2024

கல்லியூர் பகுதியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சுமார் 2மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி கல்லூர் பகுதியில் கல்குவாரி அமைக்கப்படுவதாக தெரிகிறது. அதன் காரணமாக  அப்பகுதியில் கல்குவாரி அமைக்கப்பட்டால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் மற்றும் பெரியார் முதல் சிறியவர்கள் வரை பல்வேறு நோய் தொற்று ஏற்படும் எனவே அப்பகுதி கல்குவாரி அமைக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அளித்துள்ளனர். 


ஆனால்  கல்லியூர் பகுதியில் மீண்டும் கல்வாரி அமைக்கப் பணிகள் நடைபெற்றதால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென பச்சூர் வழியாக குப்பம் செல்லும் சாலையில் சென்றாய சுவாமி கோவில் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.


மேலும் இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் தாசில்தார் இது குறித்து விளக்கம் அளித்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் எனக் கூறினர் 


ஆனால் தாசில்தார் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சம்பவ இடத்துக்கு வராத காரணத்தால் சாலை மறியல் ஈடுபட்டு  சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செய்தியாளர் .
மோ. அண்ணாமலை.

 

No comments:

Post a Comment

Post Top Ad

*/