தமிழக முழுவதும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்ட மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எவ. வேலு கலந்துகொண்டு 2333 பயனாளிகளுக்கு 36 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் வருவாய் துறை,மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 13 துறைகளில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் பல்துறை சார்ந்த முடிவுற்ற கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி,என் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், முகமை திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், .மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர், மோ.அண்ணா மலை.
No comments:
Post a Comment