நாட்றம்பள்ளி அருகே சாலை வசதி கேட்டு பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பதாகைகள் ஏந்தி சாலை மறியல்! போடாத சாலைக்கு பில் போட்டு பணம் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு* - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 August 2024

நாட்றம்பள்ளி அருகே சாலை வசதி கேட்டு பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பதாகைகள் ஏந்தி சாலை மறியல்! போடாத சாலைக்கு பில் போட்டு பணம் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு*

நாட்றம்பள்ளி அருகே சாலை வசதி கேட்டு பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பதாகைகள் ஏந்தி சாலை மறியல்! போடாத சாலைக்கு பில் போட்டு பணம் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளனூர் பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊருக்கு செல்ல சாலை வசதி இல்லை எனவும் சுடுகாட்டிற்கு செல்ல வழி இல்லை எனவும் மேலும் இங்கு ஆம்புலன்ஸ் கூட வருவதில்லை எனக்கூறியும் சாலை வசதி வேண்டுமென பலமுறை கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. 


இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்கும் பொழுது ஆல்ரெடி இப்பகுதிக்கு சாலை போட்டு விட்டதாக பணம் எடுக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.


இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்களும் பள்ளி குழந்தைகளும் சாலை வசதி வேண்டுமென்று பதாகைகள் ஏந்தி ஜங்களாபுரம் வழியாக நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இந்த சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் மற்றும் ஜங்களாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்து சாலை வசதி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பெயரில் அனைவரும் கலைந்து சென்றனர் இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
மாவட்ட செய்தியாளர் .
மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/