திருப்பத்தூரில் ஆடிமாததில் நடைபெறும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகா கணபதி ஓமம் நடைபெற்றது இதில் திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு ராமக்கா பேட்டையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆடி மாதத்தில் நடைபெறும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா காப்பு கட்டுதல் முன்னிட்டு அம்மன்ஆலயத்தில் இன்று மகா கணபதி ஓமம் நடைபெற்று பின்பு புனித தீர்த்த நீர்களைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இன்னிசை மேலதாலங்களுடன் அம்மனுக்கு தீபார்த்தனை செய்து ஓம் சக்தி அம்மாவே சரணனம் பக்தி கோஷங்கள் எழுப்பி பொதுமக்கள் மற்றும்பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அனைவருக்கும்அன்னதானம் வழங்கப்பட்டது இதில் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கோயில் நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை
No comments:
Post a Comment