திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பள்ளி மாணவி சேர்த்து வைத்திருந்த உண்டையல் பணத்தை வயநாடு மலை சரிவில் உயிரிழந்த மக்களுக்கு ஆட்சியாரிடம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது, இந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் வாணியம்பாடி செட்டியப்பணூர் பகுதியை சேர்ந்த ரித்திகா இவர் ஜனதா புறம் பகுதியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற வயநாடு துயர சம்பவத்தை பார்த்து வேதனை பட்டு வீடுகளையும் உடமைகளையும் இழந்து வரலாறு காணாத அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டு பாதிக்கபட்டுள்ளனர் அதைப்பார்த்து உண்டியலில் சேர்த்துவைத்திருந்த பணத்தை மாவட்ட ஆட்சியர் இடம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த குறை தீர்வு நாள் கூட்டத்தில் உடல் ஊனமுற்றோர் களுக்கு தையல் மிஷின்,மற்றும் காது கேளாதோர் கருவி. பேட்டரி மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனம் மாவட்ட ஆட்சிதலைவர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.
No comments:
Post a Comment