திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரும்பகேரி புதூர் கிராமத்தில் குருமன்ஸ் இன மக்கள் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் சாலையின் அருகே உள்ள குறிகிய இடத்தில் காலம் காலமாக சுடுகாடுயாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் குரும்பகேரிபுதூர் பகுதியிலிருந்து குருமன்ஸ் இன மக்கள் வசிக்கும் வரை கழிவு நீர் கால்வாய் உள்ளது, இந்த கால்வாய் வழியாக கழிவுநீர், மழைநீர் ஆகியவற்றை வந்து அருகே உள்ள ஆற்றில் கலக்கும்.ஆனால் சாலையின் நடுவே கட்டப்பட்டுள்ள கல்வெட்டு அடைக்கப்பட்டு அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி உள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்ததின் பேரில் கடந்த 2வருடங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று மாதங்களில் கால்வாய் வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்து உள்ளனர்.
இதுவரை கால்வாய் அமைக்காததால் நேற்று அப்பகுதியில் கனமழை பெய்து உள்ளது.இதனால் அப்பகுதி முழுவதும் கழிவுநீரோடு மழைநீர் கலந்து தேங்கி உள்ளது. பின்னர் நேற்று அப்பகுதியில் முதியவர் ஒருவர் இறந்து சுடுகாட்டில் புதைத்த சடலம் மேலே வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்ப்பட்டோர் கால்வாய் வசதி வேண்டி திருப்பத்தூரிலிருந்து ஜலகாம்பாறை வரை செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தங்களின் பிரச்சினை உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை .
No comments:
Post a Comment