திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி கலைச்செல்வி இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ள நிலையில் அவருக்கு திருமணம் ஆகி அவருடைய கணவர் வீட்டில் வசித்து இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.
அதன்பின் கலைச்செல்வி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் சமையல் வேலைக்கு சென்று அங்கு சமையல் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் காக்கங்கரை பகுதியில் கலைசெல்வி வீட்டின் பக்கத்து வீட்டில் கலைச்செல்வியின் அம்மா முனியம்மாள் (65) என்பவர் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு முனியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் கலைச்செல்வி காக்கங்கரை பகுதிக்கு வந்து முனியம்மாளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மீண்டும் முனியம்மாளை வீட்டில் விட்டுவிட்டு கலைச்செல்வி வேலைக்காக திருப்பூருக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் முனியாம்மாளை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்வதற்காக திருப்பூரில் இருந்து கலைச்செல்வி இன்று காலை காக்கங்கரை பகுதிக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்து கலைச்செல்வி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்கநகை, 300 கிராம் வெள்ளி பொருட்கள், 50000 ரூபாய் ரொக்கபணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து கலைச்செல்வி இது குறித்து கந்திலி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் வீட்டை பூட்டி விட்டு திருப்பூருக்கு சமையல் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தங்க நகை, வெள்ளிபொருட்கள், ரொக்கபணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாவட்ட செய்தியாளர் மோ .அண்ணாமலை
No comments:
Post a Comment