திருப்பத்தூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பாரம்பரிய உணவு திருவிழா போட்டிகள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 September 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பாரம்பரிய உணவு திருவிழா போட்டிகள்.

கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோர் போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் / மகளிர் திட்டத்தின் மூலம் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம், தன்சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் (FNHW) திட்டத்தின் கீழ் " இரத்த சோகை இல்லாத கிராமம்" குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 வட்டாரங்கள் மற்றும் 208 கிராம ஊராட்சிகளிலும், மாவட்ட அளவிலும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது.


கிராம அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்கான பாரம்பரிய உணவு திருவிழா போட்டிகள் ஆலங்காயம் மற்றும் ஜோலார்பேட்டை வட்டாரங்களில் வரும் 17.09.2024 அன்றும் கந்திலி மற்றும் திருப்பத்தூர் வட்டாரங்களில் 18.09.2024 அன்றும், நாட்றம்பள்ளி மற்றும் மாதனூர் வட்டாரங்களில் 19.09.2024 அன்றும் இந்த உணவு திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டார அளவிலான உணவு திருவிழா போட்டிகள் 23.09.2024 அன்று திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி ஆகிய வட்டாரங்களிலும் 24.09.2024 அன்று ஆலங்காயம், நாட்றம்பள்ளி, மாதனூர் ஆகிய வட்டாரங்களிலும் நடைபெறும்.


வட்டார அளவில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாவட்ட அளவிலான உணவு திருவிழா போட்டிகள் 26.09.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் நடைபெறும். இதில் வெற்றி பெறும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் எனவே மேற்காணும் நாட்களில் நடைபெறவுள்ள சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டிகளில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று இரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குடும்பங்கள் மற்றும் கிராமங்களை உருவாக்கவும், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ, ஆ, ப அவர்கள் தெரிவித்துள்ளார்.


- மாவட்ட செய்தியாளர் மோ .அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/