சந்திரபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் அரசு பல்துறை நல திட்ட உதவிகள் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சந்திரபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் அரசு பல்துறை நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
சந்திரபுரம், விருப்பாச்சி புரம், கொள்ளம்கொட்டாய், உள்ளிட்ட மூன்று ஊராட்சி கிராமமக்கள் பங்கேற்றனர் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை 100 பயனாளிகளுக்கு 2.3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது, விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு பூச்சிக்கொல்லி மருந்து, முதியோர் உதவித்தொகை தையல் இயந்திரம் குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை,மற்றும் வீட்டுமனை பட்டா மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துறை,வருவாய் துறை,மருத்துவ துறை, உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர், மற்றும் மாவட்ட ஒன்றிய குழு தலைவர் சூரியகுமார்,மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்தியா சதீஷ் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி. ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் சதீஷ் மற்றும் பயனாளிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை
No comments:
Post a Comment