திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பணியாணை வழங்கிய கலெக்டர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் DDU-GKY திட்டத்தின் கீழ் இன்று இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 8:00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் மட்டுமின்றி வேறு மாவட்டத்தில் இருந்தும் சுமார் 82 கம்பெனிகள் கலந்து கொண்டன.இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பும் வழங்கிட இளைஞர்களை தேர்வு செய்தனர், இந்த வேலை வாய்ப்பு முகாமில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர் இதன் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கம்பெனியின் பணியானையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சிஎன்.அண்ணாதுரை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் . ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன்.ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்வில். திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல். திருப்பத்தூர் துணைச் சேர்மன் ஏ ஆர். சபியுல்லாஹ் ஒன்றிய செயலாளர் குணசேகரன். மோகன்ராஜ். மாவட்ட நெசவாளர் அணிதசரதன். மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குனர்,,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், மற்றும் அரசு துணைச் சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.
No comments:
Post a Comment