திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மல்லப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்திருந்தனர்.
அப்போது அந்த மனுவில் மல்லப்பள்ளி ஊராட்சியில் கல் அரவை மில் அமைக்கப்பட்டுள்ளது அதன் ஒரு கிலோமீட்டர் தொலைவில் நாங்கள் வசித்து வருகிறோம் கல் அரைவை பற்றி சிலர் எந்த பாதிப்பும் இல்லையென தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.
மேலும் இந்த கல் அரவை மில் எங்கள் பகுதிக்கு வந்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வேலை கிடைக்கும் மேலும் தமிழக அரசின் நற்சான்று கிடைக்கும்.
ஆனால் இதனை தடுக்கும் வகையில் சில சமூகவிரோதிகள் வெடி வைக்கும் பேட்டரி எனவும் இதனால் அருகில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என புரளியை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக மல்லப்பள்ளி ஊராட்சியில் கண்டிப்பாக கல்வாரி அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்தியாளர் .
மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment