இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், மாவட்ட அமைப்பாளர்கள் திருப்பத்தூர் தேவகுமார், இராணிப்பேட்டை நந்தகுமார், வேலூர் கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி கிழக்கு வெங்கடேச ராஜா, கிருஷ்ணகிரி மேற்கு திம்மராயப்பா, தர்மபுரி மேற்கு டி.சந்திரசேகர், தர்மபுரி கிழக்கு ஆர்.சிவன் மற்றும் மாவட்ட தலைவர்கள், மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் கீழ்கட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இரங்கல்தீர்மானம்
கழகத்தின் மூத்த முன்னோடி திராவிட இயக்க சிந்தனையாளர் முரசொலி செல்வம் அவர்களின் மறைவுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கலைஞரின் மூத்த பிள்ளையாம் முரசொலியை 50 ஆண்டுகாலமாக பல்வேறு சோதனைகளுக்கு இடையில் வழி நடத்திச் சென்ற வரும் , கழகத்தின் மூத்த முன்னோடியும், சிறந்த எழுத்தாளரும், திராவிட இயக்க சிந்தனையாளருமான மதிப்பு மிகு. முரசொலி செல்வம் அவர்களின் மறைவால் பெரும் துயரில் இருக்கும் கழகத் தலைவர் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும், முரசொலி நாளிதழின் பணியாளர்களுக்கும் , கழகத் தோழர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 1.
திமுக வழக்கறிஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் பணியை தீவிரப்படுத்துவது, திமுக கழகத்தில் உள்ள அணிகளிலேயே மிகுந்த சிறப்பையும் பெருமையும் பெற்ற அணி திமுக சட்டத்துறை வழக்கறிஞர் அணி எனவே இந்த சிறப்புக்குரிய சட்டத்துறையில் உறுப்பினர் சேர்க்கும் பணியை தீவிர படுத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2.
தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டும், வாழ்த்துகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நான்காவது தலைமுறை நாயகராக, இளைஞர் அணியை வளர்த்தெடுப்பதிலும், இயக்கத்தை கட்டி காப்பதிலும், சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டி தருவதிலும் பெரிதும் பங்காற்றிய, இரவு பகலாக கண் துஞ்சாது உழைத்திட்ட மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதல்வர் பொறுப்பை வழங்கிய கழக தலைவர் அவர்களுக்கும், திமுக கழகத்தின் தலைமை கழகத்திற்கும் இக்கூட்டம் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இப்பொறுப்பினை தனக்கு கிடைத்த மகுடமாக எண்ணாமல் , கூடுதல் மக்கள் பணியாக நினைத்து செயலாற்றி வரும் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தையும் பாராட்டுதலையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது .
தீர்மானம் 3.
மக்கள் பாராட்டி, போற்றி புகழும் திராவிடமாடல் அரசு மீது பொய்யான அவதூறு குற்றச்சாட்டுகளை தெரிவிப்போர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது. திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று கடந்த மூன்றரை ஆண்டுகளில் செய்யப்பட்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்ட பணிகளால் அனைத்து தரப்பினரும் பயன் பெற்று மகிழ்ச்சி அடைந்து கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான அரசை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வரும் நிலையில், இதனை சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாத , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் , அரசியல் லாபம் தேடி உண்மைக்கு மாறான பொய்யான குற்றச்சாட்டுகளை, அநாகரிகமான முறையில் தொடர்ந்து பொதுவெளியில் பேசி வருவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
இது போன்ற பொய் பிரச்சாரங்கள் தொடரும் பட்சத்தில் திமுக சட்டத்துறை வடக்கு மண்டலம்(2) சார்பில் சட்டப்படியான பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது .
தீர்மானம் 4.
2026 சட்டமன்றத் தேர்தலில் 100% வெற்றியை பெற இப்பொழுது இருந்தே தீவிரமாக பணியாற்றுவது. எதிர்வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் கழக தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் இலட்சிய இலக்கை நிறைவேற்றிடும் வகையில் தலைமை கழகத்தின் வழிகாட்டுதலின்படி வடக்கு மண்டலம்(2)ல் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகழக கூட்டணி வெற்றி பெற தேவையான அடிப்படை பணிகளை இப்பொழுது இருந்தே தொடங்கி தீவிரமாக களப்பணியாற்றுவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5
கடந்த காலங்களில் கழகத்தினர் மீது போடப்பட்ட அரசியல் சார்ந்த தற்பொழுது நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் விரைந்து முடித்திட சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது. மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் மாவட்ட வழக்கு திறனை அமைப்பாளர் ஏசி தேவகுமார் அவர்கள் செய்து நிகழ்ச்சிக்கு வரவேற்புரை ஆற்றினார்..
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை
No comments:
Post a Comment