தாதங்குட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த முதல்வர் புகைப்படம் கொண்ட காலண்டரை உடைத்து கீழே போட்டு காலால் மிதித்த நபர் மீது கந்திலி காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் புகார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 26 October 2024

தாதங்குட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த முதல்வர் புகைப்படம் கொண்ட காலண்டரை உடைத்து கீழே போட்டு காலால் மிதித்த நபர் மீது கந்திலி காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் புகார்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கந்திலி பகுதியில் உள்ள தாதங்குட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்துள்ளது இதில் ஊராட்சி மன்ற தலைவராக கிருஷ்ணன் உள்ளார். இந்த நிலையில் தாதங்குட்டை பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் பிரபு என்பவர்  கிராம சபை கூட்டத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்புவதும் அதேபோல தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்படும் நிதிகளை குறித்து கேட்டு ஊராட்சி மன்ற தலைவருக்கு பல்வேறு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும்  தெரிகிறது. இதன் காரணமாக ஊராட்சி மன்ற தலைவருக்கும் பிரபுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக தெரிகிறது.


இந்த நிலையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்திற்குச் சென்ற பிரபு ஊராட்சி மன்ற தலைவரிடம்  அதேபோல் கேள்விகளை கேட்டு தகராறு ஈடுபட்டதாக தெரிகிறது இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த பிரபு திடீரென ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் கொண்ட காலண்டரை எடுத்து உடைத்து கீழே போட்டு காலால் மிதித்துள்ளார். 


இதனால் அதிர்ந்து போன ஊராட்சி மன்ற தலைவர் திமுகவினரிடம் தெரிவித்ததன் காரணமாக ஆத்திரம் அடைந்த திமுகவினர் நேற்று இரவு திடீரென 50க்கும் மேற்பட்டோர் கந்திலி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பிரபுவை கைது செய்ய கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில் திரும்பவும் இன்று திமுகவினர் ஒன்றிணைந்து கந்திலி காவல் நிலையம் வந்து முதல்வரின் புகைப்படம் கொண்ட காலண்டரை உடைத்து காலால் மிதித்த பிரபு மீது புகார் அளித்தனர்.


இதன் காரணமாக போலீசார் பிரபுவை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்திலி காவல் நிலையத்தில் திமுகவினர் ஒன்றிணைந்த வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/