இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கோரிக்கைகளை முழக்கமிட்டு வெளிப்படுத்தி வந்தனர். இதில் நகர பேருந்து விடக் கூறியும், சுந்தரம் பள்ளி புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கல்லாங்குத்து சாலைகளில் தார் சாலையாக மாற்ற வேண்டுமெனவும். மட்டும் கழிவு நீர் கால்வாய்கள் அமைத்துத் தரும்படியும் , மற்றும் ஒன்றியத்தில் பஞ்சாயத்து தலைவர்களாக உள்ள பெண்கள் மட்டும் பங்கேற்க வேண்டும் எனவும் அவர்களின் உறவினர்கள் பங்கேற்க கூடாது என்றும் அப்படி மீறி பங்கேற்கும் அவர்களது அவர்களது உறவினர்கள் மற்றும் சட்டத்தை மீறும் பெண்களின் பதவிகளை பறிக்க வேண்டும் எனவும் சுந்தராம்பள்ளியில் உள்ள சிப்காட் மையத்தில் தொழில் பேட்டை அமைக்க வேண்டும் எனவும் சொந்த பள்ளி பஞ்சாயத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். மற்றும் ஆர்ஓ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்றும் ஏழை எளிய மக்களுக்கு 5 சென்ட் நிலம் பட்டா வழங்க வேண்டும் எனவும் பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மே.அண்ணாமலை.
No comments:
Post a Comment