திருப்பத்தூர் நகராட்சியில் பொதுப்பணித்துறை சார்பில் சுமார் 56 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனை கூடுதல் கட்டிடம், கட்டப்பட்டு வரும் நிலையில், இப்பணிகள் ஏறத்தாழ 90 சதவிகத பணிகள் முடிவுற்ற நிலையில் இன்று அரசு தலைமை மருத்துவமனையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு மேற்க்கொண்டார்.
அப்பொழுது, மருத்துவமனையில் அடிக்கும் பெயிண்ட் பணியை ஆய்வு செய்த போது, பெயிண்ட் கலரை மாற்றியமைக்கவும், டைல்ஸ்களை மாற்றியமைக்கவும், மருத்துவமனை முன்பக்க கதவின் கைப்பிடியை பெரியதாக வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன், மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்..
- செய்தியாளர் கோபிநாத்
No comments:
Post a Comment