இதன் இந்த இடத்தில் 1998 ஆம் ஆண்டு பட்டா எண்; 383/1A என்ற இடத்தில் மகளிர் நியாய விலை கடை கட்டப்பட்டுள்ளது. மேலும் 26 ஆண்டுகளாக மின்கட்டணம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்படவில்லை வாடகையும் கட்டப்படவில்லை இதுவரை அனைத்தையும் நான் தான் கட்டி வருகிறேன் எனவும் இந்த மகளிர் நியாய விலை கடையை மற்றொரு இடத்திற்கு மாற்றக்கோரியும் இதுவரை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி அந்த நியாய விலை கடை முன்பு சின்ராஜ் சுமார் 2 மணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் நிசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார் அப்போது இதுகுறித்து சர்வேரை வரவழைத்து ஓரிரு நாட்களில் அளந்து பார்க்கிறோம் அதில் இந்த சர்வே எண் கொண்ட இடம் உங்களுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தால் அதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று கூறியதன் பேரில் தர்ணாவில் ஈடுபட்ட சின்னராஜ் அங்கிருந்து கலைந்து சென்றார் இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை
No comments:
Post a Comment