தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை காணொளி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம், தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறை கொண்ட கட்டிடம் திறப்புவிழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு க.தர்ப்பகராஜ் தலைமையில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், திமுகவின் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மு.க.அருள்நிதி, மாவட்ட பிரதிநிதி மு.க.தயாநிதி மற்றும் அரசு துறை அதிகாரிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
- செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment