10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு திறக்கப்படாத பள்ளியை திறந்து வைத்த திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் நல்லதம்பி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 March 2022

10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு திறக்கப்படாத பள்ளியை திறந்து வைத்த திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் நல்லதம்பி.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகண்ணால பட்டி ஊராட்சி சின்னகண்ணாலபட்டி கிராமத்தில் கடந்த 2013 ஆண்டு ரூபாய். 20 இலட்சத்தில் கட்டப்பட்டு, பல்வேறு காரணங்களால் திறக்க முறியாமல் இருந்தது, கடந்த 11ஆம் தேதி ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியாகின, இந்நிலையில் 10 வருடங்களாக திறக்கப்படாத நிலையில் ஊடகங்களின் வாயிலாக பொதுமக்கள் வாய்த்த கோரிக்கையின் மூலம் அரசு அந்த பள்ளியை திறக்க நடவடிக்கை எடுத்தது, இந்த பள்ளியை திறக்க ஊர்பொதுமக்களுடன், கிராம இளைஞர்கள் மற்றும் பல அரசியல் இயக்கங்களும் தொடர் போராட்டங்களையும் நடத்திவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பள்ளியை திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அ.நல்லதம்பி அவர்கள் சிறப்பு  அழைப்பாளராக பங்கு பெற்று பள்ளியை திறந்து வைத்தார், இவ்விழாவிற்கு கந்திலி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மற்றும்  பெற்றோர் சங்க தலைவர், 12 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், 11வது வார்டு மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன், கந்திலி ஒன்றிய திமுக ஒன்றிய தலைவர், கந்திலி ஒன்றிய திமுக துணைச் தலைவர் ஜி மோகன், கந்திலி ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் கி . சம்பத், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் திமுகழக பிரமுகர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர், இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கு. ராஜமாணிக்கம் சிறப்பாக செய்திருந்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad