குறுங்காடுகளை உருவாக்கி, சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் ஊராட்சி மன்ற தலைவர்!!! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 March 2022

குறுங்காடுகளை உருவாக்கி, சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் ஊராட்சி மன்ற தலைவர்!!!

திருப்பத்தூர் மாவட்டம், A.K.மோட்டூர் ஊராட்சியில், திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரி வேதியியல் துறை மாணவர்கள், AK. மோட்டூர் ஊராட்சி மன்றம் சார்பாக குறுங்காடுகள் அமைக்கும் பணி நடைபெற்றது. 

ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவர் சிவப்பிரகாசம், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், இரவு பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள், முன்னிலை வகித்தனர். Rtn.Phf.பாரதி  தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக Rtn.PHF.R. மனோகரன் (குறுங்காடு திட்டம்) கலந்து கொண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறும்காடுகளை உருவாக்கி, ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடுதல், பனை விதைகள் நடுதல், இரவுப் பள்ளி ஒருங்கிணைத்தல் என்று மாவட்டத்திற்கு முன்னோடி இளம் தலைவராக திரு.பு. வேலு அவர்கள் விளங்கி வருகிறார் என புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்வில், திருப்பத்தூர் ரோட்டரி சங்க செயலாளர் Rtn. அருணகிரி, பொருளாளர் Rtn.P. சோமு, ரோட்டரி சங்க நிர்வாகிகள், குரும்பேரி ஊராட்சி மன்ற தலைவர் திரு. ராமு தூய நெஞ்சக் கல்லூரி வேதியல் துறை பேராசிரியர் மரியா லியோ, திரு. ராதாகிருட்டிணன் சமூக ஊடக மையம் சேவகன் செயல் குழு நிறுவனர், திரு. செந்தமிழ்ச்செல்வன் தலைமை ஆலோசகர் திரு. ஏழுமலை, வேர்கள் அறக்கட்டளை தலைவர், திரு. வடிவேல் சுப்பிரமணியம் திரு. சதீஷ், பசுமை தாய்நாடு அறக்கட்டளை நிறுவனர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட பசுமை குழு உறுப்பினர் மு.பெ.சத்யராஜ், தாய் விழுதுகள் அறக்கட்டளை திட்ட மேலாளர் திரு.சந்துறு உட்பட ஊர் பொதுமக்கள், ஊராட்சி பணியாளர்கள் உட்பட  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக A.K. மோட்டூர் ஊராட்சி மன்றதலைவர் Rtn. திரு.பு. வேலு , ஒருங்கிணைத்து இந்த மரம் நடும் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/