பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 March 2022

பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்துறை பயணிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. அமர் குஷ்வாஹா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் முன்னிலைவகித்தார், விழாவில் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மண்ணின் மைந்தர் திரு ஏ வ வேலு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார் ஆற்றினார். 

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வில்வநாதன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார், தமிழ்நாடு வேளாண் உற்பத்தியாளர் சங்க தலைவர் S.R. ராஜேந்திரன், அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad