சைல்டு லைன் 1098 விழிப்புணர்வு சமுத்திரம் கிராமத்தில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 28 March 2022

சைல்டு லைன் 1098 விழிப்புணர்வு சமுத்திரம் கிராமத்தில் நடைபெற்றது.

குழந்தைகள் மற்றும்  பெண்கள் விழிப்புணர்வு சார்ந்த சைல்டு லைன் 1098 சார்பாக திருப்பத்தூர் மாவட்டம் சமுத்திரம் கிராமத்தில் 28/03/2022 இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றோர் -ஆசிரியர் கழக தலைவர், குங்ஃபூ மாஸ்டர் வெ.மூர்த்தி தலைமை தாங்கினார். 


சிறப்பு அழைப்பாளராக சமுத்திரம் ஊராட்சி மன்றதலைவர் பன்னீர்செல்வம் ஊராட்சி மன்ற செயலாளர், குமார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குமார் தாய்மண் மாத இதழ் ஒருங்கிணைப்பாளர், அ.சு. பழனி  பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருட்டிணன்,  கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி பேசினர். சைல்டு லைன் 1098 சார்பாக அலுவலர்கள், சுதாகர், செல்வி. பெரிடா கலந்துகொண்டு, 1098 எப்படி பயன்படுத்துவது? பாலியல் சீண்டல்கள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு,  குழந்தை  திருமணம், 1098 எவ்வாறு பயன்படுகிறது என்பதை விளக்கி பேசினர். 


இந்த நிகழ்வில் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கலந்து கொண்டனர். இறுதியில், பள்ளி மேலாண்மை குழு தலைவி, திருமதி. ஆனந்தி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad