4 கிலோ மீட்டர் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த 5 வயது சிறுவன். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 27 March 2022

4 கிலோ மீட்டர் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த 5 வயது சிறுவன்.

திருப்பத்தூரில் 5 வயது சிறுவன் நான்கு கிலோமீட்டர் வரை சிலம்பம் சுற்றி வோல்ட்  நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில்  இடம்பெற்று உலக சாதனை பெற்றார்.


திருப்பத்தூரில் புகழ்பெற்ற பாரத் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் வீர விளையாட்டு கலைக்கூடம் சார்பில் மாஸ்டர் கதிரவன் தலைமையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் காந்தி பேட்டை பகுதியைச் சேர்ந்த  தமிழ் இனியன் ஜனனி தம்பதியினரின்  5 வயது மகன் மித்ரன்  என்பவர் தனது ஒன்றரை  வயதில் இருந்து சிலம்பம் பயிற்சி எடுத்து வருகிறார்.


இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை காவல் மைதானத்தில் இருந்து திருப்பத்தூர் வீட்டு வசதி வாரியம் பகுதியில் உள்ள காந்தி சிலை வரை சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு மணி நேரம் மூன்று நிமிடத்தில்  சிலம்பம், ஸ்டார், மான் கொம்பு, வாள், ஈட்டி,உள்ளிட்ட  பல்வேறு கலை உபகரணங்களை பயன்படுத்தி  சாதனை செய்தார்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் 18 நாடுகளில் இயங்கி வரும் நோபல் உலக சாதனை தனியார் நிறுவனம் மூலம் பரிசு வழங்க பயிற்சி பள்ளியின் சார்பில் ஏற்பாடு செய்தனர்.


அதன் பேரில் சென்னையில் இருந்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் எனும் பெயரில் இயங்கும் தனியார் குழு திருப்பத்தூரில் இயங்கும் பாரத் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷனில் 5வயது சிறுவன் மித்ரனின்   திறமையை பதிவு செய்தனர்.


மேலும் இவரை ஊக்குவிக்கும் விதமாக தனியார் நிறுவனம் 5 வயதிற்கு உட்பட்ட சிறுவர் பிரிவில் தொடர்ந்து ஒரு மணி நேரம் மூன்று நிமிடத்தில் சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலை உபகரணங்களை சுற்றி உலக அளவில் சாதனை படைத்து இருப்பதாக  வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பதிவு செய்து உலக சாதனை பெற்றதாக சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


மேலும் மித்ரன் ஆசிஸ் வேர்ல்டு ரெக்கார்டு, இந்தியன் புக் ஆஃ ரெக்கார்டு உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட சாதனைகள் படைத்த இவர்  5 வயதில்  ஒரு மணி நேரம் மூன்று நிமிடத்தில் சிலம்பம் சுற்றி நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சோதனை செய்து இருப்பது   தமிழ்நாட்டில் இதுவே முதல்முறை எனவும் இக்குழு தெரிவித்தனர்.


இதனைத் தொடர்ந்து மேலும் தொடர் பயிற்சியின் மூலமாக உலக அளவில் சிலம்பத்தில்  சாதனை படைக்க இருப்பதாகவும் தமிழக அரசு இவரை கவனத்திற் கொண்டு அவருக்கு தகுந்த அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்றும் அவரது பெற்றோர்கள் கேட்டுக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad