இந்து சமய அறநிலையத் துறையின் திருப்பத்தூர் மாவட்ட அறங்காவலர் குழு பதவி ஏற்பு விழா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 28 March 2022

இந்து சமய அறநிலையத் துறையின் திருப்பத்தூர் மாவட்ட அறங்காவலர் குழு பதவி ஏற்பு விழா.

இந்து சமய அறநிலையத் துறையின் திருப்பத்தூர் மாவட்ட அறங்காவலர் குழு பதவி ஏற்பு விழா நடைபெற்றது, இந்த விழாவில் திரு சி. லட்சுமணன் இணை ஆணையர் இந்து சமய அறநிலைத்துறை வரவேற்றார், திரு. அமர் குஷ்வாஹா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமை தாங்கினார்.

விழாப் பேருரை மாண்புமிகு எ.வ.வேலு அவர்கள் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு R. காந்தி அவர்கள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் வாழ்த்துரை  க. தேவராஜி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி எம். எல்.ஏ, அ.நல்லதம்பி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ, என் .கே .ஆர். சூரியகுமார் அவர்கள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ். ராஜேந்திரன் MA BL அவர்கள் தமிழ்நாடு உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் அ.செ. வில்வநாதன் அவர்கள் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் என பல சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் இந்து சமய அறநிலையத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் இந்து சமய அறநிலை துறை தலைவர் அவர்களுக்கும் அறநிலைத்துறை உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கும் எடுத்துக் கூறினார் அப்போது தலைவர்களும் உறுப்பினர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


அப்போது மாவட்ட ஆட்சியர் அமர் குஸ்வாஹா கூறுகையில்  அறநிலை துறை சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் உடனடியாக செய்யப்படும் அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசாங்க கோவில்களிலும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad