12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி சிறுவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 March 2022

12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி சிறுவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா தலைமையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி சிறுவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள 6 வட்டாரங்களில்  மொத்தம் 35 ஆயிரம் சிறுவர்களுக்கு CORBEVAX தடுப்பூசி போடும் இலக்கை நிர்ணயித்து  இன்று முதல் கட்டமாக சுமார் 2500 மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. 

அடுத்தடுத்த தினங்களில் 10 நாட்களுக்குள் மைக்ரோ பிளான் அமைத்து அனைத்து சிறுவர்களுக்கும் முதல் தவணை  தடுப்பூசி போடப்பட்டு அடுத்த  28 நாட்களில் இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டது.

மேலும் கொரோனா தடுப்பு ஊசி தினத்தை முன்னிட்டு போலியோ சொட்டு மருந்து விடும்பொழுது சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஜெயராம ராஜா சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் செந்தில், மருத்துவ அலுவலர்கள் செல்வி மற்றும் சௌந்தர்யா, பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad