அடையாளம் தெரியாத நபர் ரயில் பாதையில் சடலமாக மீட்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 March 2022

அடையாளம் தெரியாத நபர் ரயில் பாதையில் சடலமாக மீட்பு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ரயில்வே பாதையில் தனியார் தொண்டு நிறுவனம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 35 வயது தக்க ஆண் சடலமாக ரயில்வே துறை காவல் அதிகாரிகளால் மீட்கப்பட்டது. சடலம் குறித்து ரயில்வே துறை காவல் அதிகாரிகள் கூறுகையில்.

இறந்து போனவருடைய நெஞ்சில் ஆனந்தி ரமேஷ் என்கிற பெயரில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அவர் அணிந்திருந்த சட்டை காலரில் விஜயன் டைலர், சி கே சி நகர், டிபிடி என்கிற லேபிள் இருந்தது. அதனால் திருப்பத்தூர் நகரை சேர்ந்த நபராக இருக்கலாம் மற்றபடி வேறு எந்த அடையாளமும் தெரியவில்லை என்றும் இது தற்கொலையா அல்லது விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று விசாரணையில் தான் தெரிய வரும் என்று கூறினர்.

பின்பு சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad