இரண்டாவது நாளாக 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 29 March 2022

இரண்டாவது நாளாக 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியா முழுவதும் சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியூசி, எச்எம்எஸ், எல் பி எஃப், உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க  கூட்டமைப்பு சார்பாக 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து நேற்றும் இன்றும் வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.


இதைத்தொடர்ந்து திருப்பத்தூரில் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் நேற்று சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்பு சாலை மறியலில் ஈடுபட்ட பொழுது சுமார் 110 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.


இந்நிலையில் இன்று 2-வது நாளாக திருப்பத்தூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகாமையில் 50க்கும் மேற்பட்ட அகில இந்திய தொழிலாளர்கள் கூட்டமைப்பை சார்ந்தவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அதேபோல்  சுமார் 20க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்களும்  மத்திய அரசை கண்டித்து 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad