அரசு பேருந்து புளியமரத்தின் மீது மோதி விபத்து; 8 பேர் படுகாயம். 15க்கும் மேற்பட்டோர் லேசான காயம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 March 2022

அரசு பேருந்து புளியமரத்தின் மீது மோதி விபத்து; 8 பேர் படுகாயம். 15க்கும் மேற்பட்டோர் லேசான காயம்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து மயில்பாறை வரை செல்லும் அரசு பேருந்து திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா கேத்தாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் குமார்(45) மற்றும் திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த நடத்துனர் தட்சிணாமூர்த்தி (44) ஆகியோர் சுமார் 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருப்பத்தூரில் இருந்து மயில் பாறை பகுதியை நோக்கி பஸ்சில் சென்று கொண்டிருந்த பொழுது வெங்களாபுரம் அருகே மிதிவண்டியில் சென்ற முதியவர் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுனர் குமார் வலதுபக்கமாக திருப்பியதில் நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.


அப்போது அதில் பயணம் செய்த அரசு பேருந்து ஓட்டுநர் குமார், கங்காதேவி (44), பொன்னன் (73), சரஸ்வதி(62), அருள்ஜோதி(38), சாந்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் விபத்துக்குள்ளானதில் 6 பெண்கள் 2 ஆண்கள் 8 பேர் மட்டும்  படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மீதமுள்ள 15க்கும் மேற்பட்டோர் லேசான காயமுடன் உயிர் தப்பினர், விபத்து குறித்து திருப்பத்தூர் கிராமிய போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

*/