தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்துறை மாணவர்கள்,பொம்மிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருநாள் கல்வி விழிப்புணர்வு முகாம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 March 2022

தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்துறை மாணவர்கள்,பொம்மிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருநாள் கல்வி விழிப்புணர்வு முகாம்.

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மாணவ- மாணவிகளின் ஒருநாள் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் முருகன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பூவரும்பு சர்வேசன், 2- வார்டு உறுப்பினர், சுகந்தி சுரேஸ், பழத்தோட்டம் பரத், முன்னிலை வகித்தனர். தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர், அம்பேத்கர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பொம்மிகுப்பம் ஊராட்சிமன்ற தலைவி, திருமதி. தேன்மொழி வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் எம்ஜி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவகுமார்,  பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருட்டிணன் உட்பட சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். 

பள்ளியின் வளாகத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் மரக்கன்றுகளை நட்டு சிறப்பு செய்தனர். முடிவில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad