ஏப்ரல் 2 முதல் தொடங்கும் இலக்கிய திருவிழாவுக்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 March 2022

ஏப்ரல் 2 முதல் தொடங்கும் இலக்கிய திருவிழாவுக்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் வருகின்ற இரண்டாம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இலக்கியத் திருவிழா மற்றும் புத்தகங்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.


இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது : திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள இலக்கிய திருவிழாவிற்கு பொதுமக்கள், அரசு அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், என அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்.


இந்திய அளவில் ஜெய்ப்பூரில் இலக்கியத் திருவிழாவும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில்  புத்தக கண்காட்சியும்  மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம் ஆனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த இலக்கியத் திருவிழாவுடன் சேர்ந்து புத்தக கண்காட்சியும் நடைபெறுவது இதுவே முதல் முறை அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள சிறிய மாவட்டமான திருப்பத்தூரில் நடைபெறுவது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் இந்த இலக்கிய திருவிழாவிற்கு இலக்கியளார்கள், சினிமா நடிகர்கள், புத்தக பதிப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


அதே போல் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய எழுத்தாளர்களான 45பேர்  கலந்து கொண்டு 54 அரங்குகள் போடப்பட்டு இலக்கிய திருவிழா நடைபெற உள்ளது எனவும் அதேபோல் 50க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் கலந்துகொண்டு 250க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் நூல்கள் என சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலாக புத்தகங்கள் இடம் பெறுவதாகவும் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.


திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்ட மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad