பட்டியல் இன சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, ஊராட்சி நிர்வாகம் அபகரிப்பு!!! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 March 2022

பட்டியல் இன சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, ஊராட்சி நிர்வாகம் அபகரிப்பு!!!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியம் ப.முத்தம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிப்பதற்கு  தேவையான பட்டாவை அன்றைய அரசு 1996-ம் ஆண்டு நிலம் ஒதுக்கி பட்டா வழங்கி உள்ளது.


பா முத்தம்பட்டி கிராமத்தில் புது காலனி என்ற பெயரில் அங்கு புதிதாக வீடு கட்டி மக்கள் வசித்து வருகின்றனர். ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக, சர்வே எண்கள்  265/2,266/2,269/2  ஆகும், அந்த மக்களின் எதிர்கால வளர்ச்சிக்காக விளையாட்டு இடம்,  பூங்கா,நூலகம், சமுதாயக் கூடம் போன்ற செயல் பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடமும் உள்ளது.


இந்த நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பா. முத்தம்பட்டி கிராமத்தில், ஊராட்சி மன்ற கட்டிடம்  பழமையானதாக இருப்பதால், புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு. அதற்கான நிதியாக ஒன்றிய கவுன்சிலர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


ஊராட்சி மன்றம் கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட பொழுது, ஏற்கனவே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை விட்டு விட்டு,அந்த ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அவர்களின் தலையீட்டால் பட்டியலின மக்களின் பயன் பாட்டிற்கு ஒதுக்கப் பட்டுள்ள இடத்தை தேர்வு செய்து வேண்டுமென்றே செயல் படுகிறார்கள் என்பது  அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். 


அரசுக்குச் சொந்தமான இடம் இருக்கும்பொழுது வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ஆதிதிராவிட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த ஊர் மக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகார் மனுவாக அளித்துள்ளனர். இதனை விசாரித்த ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்கள், கட்டிடம் கட்ட  கூடாது என்று வாய்மொழி உத்தரவாக தடைவிதித்துள்ளனர்.
ஆனால் அந்த உத்தரவை மதிக்காத ஊராட்சி மன்ற நிர்வாகம், தற்போது ஊராட்சி மன்ற கட்டிடத்தை கட்ட முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் இளைய சமுதாயத்தினரின் நிலமை கேள்வி குறியாகும் என்று மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி வருகின்றனர். 


இந்த நிலைமை இப்படியே நீடித்தால் நாங்கள் ஜனநாயக ரீதியான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 


மாவட்ட நிர்வாகமும், வட்டார வளர்ச்சி நிர்வாகமும், உடனடியாக தலையிட்டு அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்ட ஆவன செய்யுமாறு அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 


வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஊராட்சி நிர்வாகத்தின் பணி அந்தப் பகுதி மக்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad