கட்டுப்பாட்டை இழந்த தனியார் நிறுவன வேன் எதிரே வந்த லாரியில் மோதி விபத்து, 4 பேர் பலி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 March 2022

கட்டுப்பாட்டை இழந்த தனியார் நிறுவன வேன் எதிரே வந்த லாரியில் மோதி விபத்து, 4 பேர் பலி.

ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த காலணி  தொழிற்சாலை வேன் சாலையில் எதிர் திசையில் சென்ற லாரியின் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் இயங்கி வருகிறது, (ஆஸ்டன் காலணி தொழிற்சாலை) இத்தொழிற்சாலையிற்கு வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் இருந்து 20க்கும் மேற்ப்பட்ட பெண் தொழிலாளர்கள் ஏற்றி ஆம்பூர் நோக்கி வேன் வந்து கொண்டிருந்த போது சோலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் தடுப்புகளை உடைத்து எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சுண்ணாம்பு மூட்டை ஏற்றி வந்த  லாரியின் மீது பயங்கரமாக மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் பெண் தொழிலாளர்கள் 3 பேர்உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையில் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..

No comments:

Post a Comment

Post Top Ad