திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் செந்தில்குமார். டீ கடையில் மோட்டுகொல்லை பகுதியை சேர்ந்த காதர் என்பவர் டீ குடித்து கொண்டிருந்த போது அவ்வழியாக அதே பகுதியை சேர்ந்த 3 நபர்கள் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து போய் உள்ளதாகவும், இருசக்கர வாகனத்தில் இருக்கும் பெட்ரோல் தருமாறு கேட்டு காதர் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இச் சம்பவம் டீக்கடையில் வைத்துள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் செந்தில்குமார் ஆம்பூர் நகர பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது காதர் என்பவரை தாக்கியவர்கள் சஞ்சய், ஜான் (எ) விஜய், சரண் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. பின்னர் சஞ்சய் மற்றும் ஜான் (எ) விஜய ஆகிய இருவர் கைது செய்து ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் கனிமொழி முன்பு ஆஜர்படுத்தி உள்ளனர். அப்போது விசாரித்த நீதிபதி சிசிடிவி காட்சி பதிவுகள் உள்ளதா என காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பி உள்ளர். அப்போது காவல்துறையினர் சமர்ப்பிக்காததால் 2 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்காமல் விடுவித்து உள்ளார்.
இந்நிலையில் இன்று சமூக வலைதளங்களில் ஒருவரை 3 பேர் தாக்கிய வீடியோ பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் முறையாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்காததால் காவல்துறையினரை சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வசைபாடி வருகின்றனர்.
No comments:
Post a Comment