வேளாண் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு புரட்சி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 20 March 2022

வேளாண் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு புரட்சி.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு முகாம்கள் அமைத்து பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி புரட்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சக்கர குப்பம் பகுதியில் வசிக்கும் உமாபதி என்கிற விவசாயியின் தோட்டத்தில் பூக்கள் உதிர்வதைத் தடுக்கவும் பழங்கள் அதிக அளவில் சாகுபடி ஈட்டவும் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படும் மாட்டின் கோமியம் சாம்பல் பெருங்காயம் ஆகியவற்றை  சேர்த்து நன்றாக கலந்து நாற்பத்தி எட்டு நாட்கள் நிழலில் வைத்து அடுத்த இரண்டாவது நாள் தண்ணீருடன் கலந்து உருவாக்கும் பெருங்காய கரைசலை தெளிக்கும் பொழுது சாகுபடி மிகையாக இருக்கும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தி புரட்சி செய்தனர்.


இன்றைய காலகட்டத்தில் இயற்கை உரம் இயற்கை விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் மிக முக்கியமான ஒன்று என்பதால் விவசாயிகளிடையே பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகளில் விழிப்புணர்வு புரட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad