ரூ.3 இலட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 March 2022

ரூ.3 இலட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா எல்லைக்குட்பட்ட சுண்ணாம்பு பகுதியில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாட்றம்பள்ளி அருகே தொடர்ந்து போதைவஸ்து பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில்   அவருடைய அறிவுறுத்தலின் பேரில் நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் துணை காவல் ஆய்வாளர் முனிரத்தினம் காவலர்களுடன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சந்தேகம் அளிக்கும் வகையில் ஹூண்டாய் வெர்னா நான்கு சக்கர வாகனம் நின்று கொண்டிருப்பதை கண்டு விசாரிக்கும் பொழுது காருக்குள் இருந்தவர்கள் கார் பஞ்சர் ஆகிவிட்டது என்று கூறியுள்ளனர்.

அப்போது காருக்குள் பரிசோதிக்க காவலர்கள் முயற்சி செய்தபோது சட்டென பஞ்சர் ஆன காரை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பியோடியுள்ளனர். பின்பு சுதாரித்துக் கொண்ட காவலர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சினிமா பாணியில் துரத்திச் சென்று பயணபள்ளி பகுதியில் சுற்றி வளைத்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் காருக்குள் இருந்தவர்கள் இருவர் காரை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

அதன் பின்பு காரை பரிசோதித்து பார்த்ததில் சுமார் 26 மூட்டைகளில் 280 கிலோ எடையுள்ள சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, ஹான்ஸ், கூல் லிப், எம்டிஎம் கோல்ட் உள்ளிட்ட போதைவஸ்து பொருட்கள் இருப்பதைக்கண்டு  காருடன் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர், மேலும் பறிமுதல் செய்த போதைவஸ்து பொருட்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad