தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 March 2022

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

திருப்பத்தூரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் புள்ள பால் உற்பத்தியாளர்கள் மாநிலம் தழுவிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிவாஜி பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ் பாபு உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோபு ஆகியோர் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் முகமது அலி சிறப்புரை ஆற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அப்போது வாணியம்பாடி ஆம்பூர் ஜோலார்பேட்டை நாற்றம்பள்ளி ஆலங்காயம் உள்ளிட்ட  திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் தமிழக அரசு மற்றும் ஆவின் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூபாய் 10 வீதம் உயர்த்தி  பசும்பாலுக்கு ரூபாய் 42 ரூபாய் எனவும் எருமைப் பாலுக்கு ரூபாய் 51 எனவும் அறிவிக்க வேண்டும்.


மேலும் ஆவின் பாலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 3 வீதம் விற்பனை விலையை குறைத்தால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய மாநில அரசு ரூபாய் 300 கோடியை ஆவின் ஒன்றியங்களுக்கு வழங்கிட வேண்டும், தினந்தோறும் நடைபெறும் பால் கொள்முதலை தற்போது 32 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக உயர்த்த வேண்டும்,   ஆரம்ப சங்கப் பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்திட 50 சதவிகிதம் தொகையை ஆவின் நிர்வாகம் வழங்க வேண்டும், கால்நடை தீவனங்கள் தரமானதாக 50% மானிய விலையில் வழங்க வேண்டும், குழந்தைகளின் சத்துணவில் பால் மற்றும் பால் பவுடர் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad