திருப்பத்தூர் அருகே மர்மமான முறையில் 45 வயது தக்க பெண் கிணற்றில் சடலமாக மீட்பு! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 26 March 2022

திருப்பத்தூர் அருகே மர்மமான முறையில் 45 வயது தக்க பெண் கிணற்றில் சடலமாக மீட்பு!

திருப்பத்தூர் அருகே மர்மமான முறையில் 45 வயது தக்க பெண் கிணற்றில் சடலமாக மீட்பு! தந்தையின் மீது நடவடிக்கை எடுக்க பெண் குழந்தைகள் கோரிக்கை!


திருப்பத்தூர் மாவட்டம்  செவ்வாத்தூர் அடுத்த ஆட்டுகொட்டகை பகுதியைச் சேர்ந்த சண்முகம் (50) கடந்த 27 வருடங்களுக்கு முன்பு காக்கங்கரை  கருங்கல்வட்டம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (45) என்பர் உடன் திருமணமாகி திவ்யா (19) ஸ்ரீவித்யா (16) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர், லட்சுமி அதே பகுதியில்  பூ பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார், சண்முகம் பெங்களூரில் தங்கி மேஸ்திரி வேலை செய்து வருவதாக தெரிகிறது 


இந்த நிலையில் சண்முகனின் அண்ணனான நடேசன் சண்முகத்திற்கு தொலைபேசியில் அழைத்து தன்னுடைய மனைவி பூ பறிக்கும் தொழில் செய்யும் இடத்தில் பல பேருடன் தகாத உறவு கொண்டிருக்கிறார் அதனை நீ கண்டிக்க வேண்டும் எனக் கூறி வந்ததாக தெரிகிறது, இதனை நம்பிய சண்முகம் அடிக்கடி லட்சுமியிடம் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. 


கணவன் மனைவிக்கு வாய்த்தகராறு அதிகமாகவே கடந்த வியாழன் அன்று லட்சுமி காணாமல் சென்று உள்ளார், இதுகுறித்து கந்திலி காவல் நிலையத்தில் லட்சுமியின் இரண்டு பெண்களும் தாயை காணவில்லை எனக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர்.


அதனை தொடர்ந்து இன்று சண்முகம் வீட்டுக்கு எதிரே உள்ள கிணற்றில் லட்சுமியின் உடல் சடலமாக மிதந்துள்ளது. எனவே அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் சடலமாக இருந்த லட்சுமி உடலை மீட்டனர்.


பின்பு இதுகுறித்து கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இச்சம்பவம் குறித்து லட்சுமியின் மகள்கள் திவ்யா மற்றும் ஸ்ரீவித்யா ஆகிய இருவரும் தன்னுடைய தாய் இறந்ததற்கு காரணம் தன்னுடைய தந்தையான சண்முகமே ஆவார், எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை வைத்தார்.


மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் லட்சுமி தானாக கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கணவனான சண்முகம் கொலை செய்து கிணற்றில் வீசினாரா? என்ற எண்ணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad