அரசு அலுவலகம் கட்ட புறம்போக்கு நிலத்தை அளந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 March 2022

அரசு அலுவலகம் கட்ட புறம்போக்கு நிலத்தை அளந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கட்டேரி அம்மையப்பன் நகர் பகுதியில் சுமார் 4 ஏக்கர் அளவில் புறம்போக்கு நிலம் உள்ளது, இந்த நிலத்தில் 800 வருட பழமையான பிரசித்திப் பெற்ற காட்டேரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலின் முன்பே உள்ள சுமார் 4 ஏக்கர் அளவிலான புறம்போக்கு நிலத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தங்கும் மாளிகை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் சார்பில் வழிவகை செய்து தர இன்று இந்த இடத்தை அதிகாரிகள் அளக்க  வந்துள்ளனர்.


இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகை இட்டு நிலத்தை அளக்ககூடாது என பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர் இதனால் அப்போது சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் இது கோவில் இடம் வருடத்திற்கு ஏழு வாரங்கள் திருவிழா நடைபெறும், 28 ஊர்  கிராம மக்கள் ஒன்றிணைந்து திருவிழா நடத்துவோம்  இந்த இடத்தில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து திருவிழா நடைபெறுவது உண்டு மேலும் பச்சை கொம்பு,தேர், பக்தர்களின் வாகனங்கள் எல்லாம் இந்த இடத்தில்தான் நிற்க வைப்போம்


அதனால் கோயில் இடத்தை கையகப்படுத்தக் கூடாது என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad