சுமார் 15 வருடங்களாக தன்னுடைய மனைவி பரிமளாவை பிரிந்து சங்கர் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார், இந்நிலையில் அவ்வப்போது தன்னுடைய உறவினர் ராமனுக்கு சொந்தமான கிணற்றில் சுமார் 6 மணிக்கு சங்கர் குளிக்க சென்றுள்ளார் குளிக்கச் சென்ற சங்கருடைய மிதி வண்டியும் அவர் அணியும் உடையும் நீண்ட நேரமாக இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிணற்றுக்கு சொந்தமான ராமனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு காவல்துறை சுமார் 4 மணி நேரமாக கிணற்றில் சங்கரின் உடலை தேடியும் சங்கரின் உடல் கிடைக்கவில்லை, மேலும் தீயணைப்பு துறையினர் காலை மீண்டும் உடலை தேடும் பணியில் ஈடுபடுவதாக கூறி சென்றனர்.
கிணற்றிற்கு அருகில் மிதிவண்டியும் சங்கரின் உடையும் இருக்கிறது ஆனால் சங்கரின் உடல் கிடைக்கவில்லை என்பதால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றமும் பரபரப்பும் சூழ்ந்துள்ளது. மேலும் நிஜமாகவே சங்கரின் உடல் கிணற்றில் உள்ளதா இல்லை வேறு எங்காவது காணாமல் போய் விட்டாரா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment