அனைவரும் சமம் என்கிற நிலை வரும் திருநங்கைகள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 24 March 2022

அனைவரும் சமம் என்கிற நிலை வரும் திருநங்கைகள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சு.

ஆணுக்கு பெண் சமம் என்கிற நிலை மாறி அனைவரும் சமம் என்கிற நிலை வரும் திருநங்கைகள் குறைகேட்பு  கூட்டத்தில்  திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சு.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அமைந்துள்ள லயன்ஸ் கிளப் வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் திருநங்கைகளின் குறைகேட்பு மற்றும் நல்லுறவு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


அப்போது திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த சுமார் 150க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்களுக்கு அடிப்படை வசதிகளான வீடு ரேஷன்கார்டு உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தங்களுக்கு இருக்கிறது என்றும் பொதுமக்கள் மட்டுமல்லாது அரசு அதிகாரிகளும் எங்களை இந்த சமூகத்திலிருந்து விலகியே பார்ப்பதால் இதுவரை எங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதியுற்று வருகிறோம்.  

எனவே எங்களையும் மதித்து அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியதற்காக நன்றி என்றும் உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் எங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.


மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில்..


சமூகத்தில் அங்கீகாரம் வேண்டும் என்றால் கடினமான உழைப்பும் முயற்சியும் வேண்டும். இந்த சமூகத்தில் ஒதுக்குதல் என்பது அனைவருக்கும் பொதுவானது எங்களையும் எங்களுடைய உற்றார் உறவினர்களில் யாராவது ஏதோ ஒரு காரணத்திற்காக ஒதுக்கி தான் வைத்திருககிறார்கள்.  

எனவே இந்த சமூகம் நம்மை ஒதுக்குகிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு வேறு வழியின்றி நீங்கள் செய்யும் சிறிய சிறிய குற்றங்களை படிபடியாக குறைத்துக்கொண்டு இட்லி கடை பெட்டிகடை போன்று ஏதாவது ஒரு தொழில் செய்து சுய வாழ்க்கையை தரமானதாக மாற்றிக் கொள்ளுங்கள். அதற்காக வருவாய்த் துறை மூலமாகவும் நாங்கள் அறிந்த சிறு சிறு உதவியாளர்கள் மூலமாகவும் 100% உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம். படித்த திருநங்கைகள் அரசு தொழில்சார்ந்த பதவிகளுக்கு வர முயற்சி செய்யுங்கள் அதற்கான தேர்விற்கு தேவைப்படும் பயிற்சி  புத்தகங்களை  உங்களுக்கு வழங்கி உதவி செய்கிறோம்.


முன்பெல்லாம் சமூகத்தில் ஆண் ஆதிக்கம் இருந்தது. தற்பொழுது ஆணுக்குப் பெண் சமம் என்கிற நிலை வந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் மிக விரைவில் ஆண், பெண், திருநங்கை என்ற வேறுபாடில்லாமல் அனைவரும் சமம் என்கிற நிலை வரும். அதற்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்.


கூட்டத்தில் சார் ஆட்சியர் லஷ்மி,  திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர் சிவப்பிரகாசம், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் திருப்பத்தூர் மாவட்ட திருநங்கைகளின் தலைவிகள் சரோஜினி அவந்திகா ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad