திருப்பத்தூர் கந்திலி ஒன்றியம் ப. முத்தம்பட்டி ஊராட்சியில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்ட ரூபாய் 23 லட்சம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு ரூபாய் 14 லட்சம் ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டு இந்தத் திட்டத்துக்கான பூமிபூஜை இன்று ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் குமார் தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ நல்லதம்பி கலந்துகொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலகம்கட்டிடம் கட்டும் பணி மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியே பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட அறகாவல் குழு தலைவர்.K.S. அன்பழகன், ஒன்றிய சேர்மன் திருமதி. ஒன்றிய கவுன்சிலர் விஜய மகாலிங்கம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சம்பத் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தசரதன், ஒன்றிய துணைச் தலைவர் ஜி. மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment