ஐந்து வருடமாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் சாலை மறியல். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 18 March 2022

ஐந்து வருடமாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் சாலை மறியல்.

திருப்பத்தூர் அருகே ஐந்து வருடகாலமாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்து வார்டு உறுப்பினருடன் சாலை மறியல்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தோரணம்பதி மற்றும் குமராம்பட்டி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.


இந்த நிலையில் கடந்த ஐந்து வருடகாலமாக ஊராட்சி நிர்வாகம் சரிவர குடிநீர் வினியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தும்  அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


அதன் காரணமாக தோரணம்பதி ஊராட்சி மன்ற தலைவர் நித்யானந்தம் மற்றும் வார்டு உறுப்பினர் சாந்த சிவன் ஆகியோரிடம் பொதுமக்கள் குடிநீர் சரி வசதி செய்து தரும்படி கேட்டு உள்ளனர்.


அவனைத் தொடர்ந்து  ஊராட்சி மன்ற தலைவர் நித்யானந்தம் மற்றும் உறுப்பினர் சாந்தசிவன் ஆகியோர் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் அளித்து வந்ததாக தெரிகிறது இதன் காரணமாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வார்டு உறுப்பினர் சதாசிவம் முன்னிலையில்  ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை திடீரென காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


சம்பவம் அறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய ஆய்வாளர் திருமலை பொதுமக்களிடம் இன்னும் ஒரு வார காலத்திற்குள் உங்களுடைய தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்.


இதனால் சுமார் ஒரு மணி நேரத்திள்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad