அரசு நல்வாழ்வு மைய அலுவலர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் கவனயீர்ப்பு ஊர்வலம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 18 March 2022

அரசு நல்வாழ்வு மைய அலுவலர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் கவனயீர்ப்பு ஊர்வலம்.

திருப்பத்தூரில் அரசு நல்வாழ்வு மைய அலுவலர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணி நிரந்தரம் சம்பந்தமாக கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகத்தில் இருந்து சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் வரை அரசு நல்வாழ்வு மைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சுமார் 70க்கும் மேற்பட்டோர் தங்களுடைய பணி நிரந்தரம் சம்பந்தமாக கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.


உலகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய நோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலையில், தமிழகத்தில் தமிழக அரசின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, அவற்றில் முக்கியமாக மருத்துவ சேவைகள் தேவைப்படும் நிலையில் மருத்துவர்கள் பணி நியமனம் ஒப்பந்த அடிப்படையிலும் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் நடைபெற்றன.


இதில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட துணை இயக்குனர் மற்றும் மாவட்ட இணை இயக்குனர்களின் மூலமாக நடைபெற்ற தேர்வின் அடிப்படையில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டு கொரானா முதல் அலையில் 70% பேர் சிறப்பு மருத்துவராக 6 மாதம் முதல் 9 மாதம் வரை பணியாற்றி இருகிறார்கள், அதற்குப் பின்பு இரண்டாம் அலை வரும்பொழுது எங்களில் பல பேர் பல இடங்களுக்கு பல பிரிவின் கீழ் மாற்றப்பட்டு பணியாற்றினோம்.


பேரிடர் காலகட்டத்தில் தமிழக அரசுடன் இணைந்து இரவு பகல் பாராமல் குடும்பங்களையும் உறவினர்களையும் விட்டு விட்டு சிவப்பு மண்டலம் என்று கருதக்கூடிய பகுதிகளிலும் பணியாற்றி பலபேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையிலிருந்து மீண்டு வந்து இதே சேவையை முழு மனதோடு தொடர்ந்து  செய்துள்ளோம்.


எனவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை எங்கள் குடும்பத்தின் மூத்தவராக நிணைத்து கேட்கின்றோம் எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் எங்கள் மருத்துவ  எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போதைய தற்காலிக பணியினை முடிந்தவரையில் பணி பாதுகாப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்து தர வேண்டும், அதேபோல் தமிழக அரசு மார்ச் 31ஆம் தேதி முதல் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை நீக்கப்படுவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 


திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 43 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் இருக்கிறார்கள் அதில் சில பேர் மாற்றுத்திறனாளிகளாகவும்  கணவனால் கைவிடப்பட்டோரும் இணைந்து இருக்கிறார்கள் அவர்களின் குடும்ப  வறுமையை கருத்தில் கொண்டு அவர்கள் வாழ்வாதாரத்திற்குரிய பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றும்  கேட்டுக்கொள்வதாக கூறி கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad