திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கக்கூடிய திருப்பத்தூரில், மிகப் பழமையான பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. சேர்மன் திரு.v.s வீரபத்திர முதலியார் பூங்கா.
இந்த பூங்காவில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் காலை மாலை வேலைகளில் இந்த பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர், 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு பூங்கா 80 ஆண்டுகளை கடந்த இந்த பூங்கா பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது, இந்த பூங்காவில் இரவு நேரங்களில் விளக்குகள் எரிவதில்லை இதனால் பெண்கள் குழந்தைகள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
இதனை பயன்படுத்துகின்ற மக்கள் உடனடியாக இந்த பூங்காவை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன நகரமன்ற தலைவர், நகராட்சி ஆணையர் ஆகியோரின் கடைக்கண் பார்வை இந்த பூங்காவிற்கு கிடைக்குமா என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
திருப்பத்தூர் செய்தியாளர் : தமிழ்மொழி
No comments:
Post a Comment