மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் திருவிழாவைப் போல் காட்சி அளித்த மக்கள் குறைதீர்வு நாள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 21 March 2022

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் திருவிழாவைப் போல் காட்சி அளித்த மக்கள் குறைதீர்வு நாள்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூடுதல் வளாகத்தில் வாரத்தின் முதல் நாளாகிய திங்கட்கிழமை இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாய் இருந்ததால் திருவிழாவைப் போல் காட்சி அளித்தது.


ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா ஜோலார்பேட்டை வாணியம்பாடி ஆம்பூர் மாதனூர் ஆலங்காயம் உள்ளிட்ட  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனு பெற்றுக் கொண்டு துறை சார்ந்த அதிகாரிகளை அருகாமையில் வைத்து உடனுக்குடன் மனுவை பரிசீளிப்பது வழக்கம். 


நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் துவக்கப்பட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் தங்களுடைய குறைகளை கூற பல்வேறு பகுதிகளிலிருந்து 5 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை கூட்டம் கூட்டமாக வந்து இருந்தனர் இதனால் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் கூடுதல் வளாகம் திருவிழாவைப் போல் காட்சி அளித்தது. 

No comments:

Post a Comment

Post Top Ad