ஐந்து வயது அரசுப்பள்ளி மாணவன் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 March 2022

ஐந்து வயது அரசுப்பள்ளி மாணவன் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்தார்.

திருப்பத்தூரில் ஐந்து வயது அரசுப்பள்ளி மாணவன் இரண்டு நிமிடத்தில் அமைச்சர்கள், கண்டங்கள், கடல்கள் என பல்வேறு பெயர்களைக் கூறி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்தார்.


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராஜாவூர் ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுமார் -85க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர், இப்பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக சாதனைகளை படைத்து வருகிறது இதற்கு முழுக்காரணம் நல்லாசிரியர் விருதுபெற்ற இந்திரா ஆசிரியர் ஆவார்.


இவர் நல்லாசிரியர் விருது என பல விருதுகளையும் பல தலைவர்களிடம் வாங்கியுள்ளார் அது மட்டுமின்றி தனது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை தனது சொந்தப் பிள்ளைகளாக கவனித்து வருகிறார்.


இந்த நிலையில் நல்லாசிரியர் இந்திராவின் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமையிலும் தனித்தன்மை பெற்று விளங்குகின்றனர், இதேபோல் தலைமை ஆசிரியரின் சொந்த செலவில் 85 மாணவர்களையும் மூன்று சக்கர வாகனத்தில் வரவழைத்து பள்ளியை மென்மேலும் மேம்படுத்திக் கொண்டு வருகிறார்.


இதனைத் தொடர்ந்து தலைப்பை காரன் பகுதியை சார்ந்த சுகுமார் சங்கீதா தம்பதியினர் மகனான யோகேஷ் 5 வயது சிறுவன் ராஜாவூர் அரசு தொடக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார், இவரது சாதனையை தனியார் நிறுவனமான ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் யோகேஷ் மாணவனின் திறமையை பதிவுசெய்ய வந்தது அப்போது அவர்களுடைய முன்னிலையில் யோகேஷ் இரண்டு நிமிடத்தில் தமிழக அமைச்சர்கள், மாநிலங்கள் 29, தமிழக மாவட்டங்கள்38, கண்டங்கள் 7, கடல்கள் 5, முக்கனி, மூன்று சங்கங்கள் ,மூவேந்தர்கள், ஐவகை நிலங்கள், எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் 16 செல்வங்கள் ஆகியவற்றின் பெயர்களை இரண்டு நிமிடத்தில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார்.இதனை அறிந்த திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யன்ன் யோகேஷையும்  அவரது திறமையும் வெளிக்கொண்டுவந்த தலைமை ஆசிரியரான இந்திராவையும் பாராட்டி இனிப்புகள் வழங்கினார், இதேபோல் பல மாணவர்களையும் பல விருதுகளை வாங்க வைக்கப் போகிறார் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் இந்திரா அவர்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad