ரயில்வே போலீசார் சார்பில் குழந்தைகள் உதவி மைய விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 24 March 2022

ரயில்வே போலீசார் சார்பில் குழந்தைகள் உதவி மைய விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகாமையில் அமைந்துள்ள ஒய் எம் சி ஏ பள்ளி வளாகத்தில் ரயில்வே குழந்தைகள் உதவி மையம் சார்பாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறை அதிகாரிகள் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

அப்போது பாதுகாப்பற்ற நிலையில் ரயிலில் தனியாக பயணம் செய்யும் குழந்தைகளுக்கு பெற்றவர்களாகவும், பள்ளிக்குச் செல்லாமல் ரயில் நிலையத்தில் சுற்றித் திரியும் குழந்தைகளுக்கு உதவிடவும், ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ரயில்வே குழந்தைகள் உதவி மையம் குறித்தும் அந்த அமைப்பின் சார்பாக ஏற்படுத்தப்பட்ட  1512 என்கிற இலவச எண் குறித்தும்  விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

மேலும் ரயில்வே இருப்புப் பாதையை கடக்கக் கூடாது. மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும் அப்போதுதான் விபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றும் குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


அப்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ் ஆர் டி பி எஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் தமிழரசி குழந்தைகளின் பாலியல் சீண்டல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சைல்டு ஹெல்ப் லைன் 1098 குறித்தும் விளக்கம் அளித்தார்.


இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை ஆய்வாளர் இளவரசி, உதவி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமை காவலர்கள் புஷ்பா, சுப்பிரமணி, பெல்சியா, அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad