நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மோதியதால் சம்பவ இடத்திலேயே பலி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 24 March 2022

நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மோதியதால் சம்பவ இடத்திலேயே பலி.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பசலிகுட்டை அடுத்த புரத்தார் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சந்திர கவுண்டர் மகன் திருப்பதி கல்லுடைக்கும் தொழில் செய்து வருகிறார்.


வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த வீரன் மகன் அருண்குமார் லாரி ஓட்டுநராக பணிபுரியும் இவர்  புதூர் நாடு பகுதியில் அரசு சார்பாக நடைபெறும் சாலை பணிக்காக டிப்பர் லாரியில் ஜல்லி ஏற்றிக் கொண்டு செல்லும் பொழுது லாரி பழுதடைந்து விட்டதால் புறத்தார் வட்டம் பகுதியின் சாலை ஓரமாக லாரியை நிறுத்தி இருக்கிறார்.


இந்நிலையில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வீட்டை நோக்கி வேகமாகச் சென்ற திருப்பதி திடீரென நிலைதடுமாறி முன்னால் பழுதடைந்து நின்றுகொண்டிருந்த லாரியின் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியானார்.


பின்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் கிராமிய  காவல்துறை சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad