மருத்துவர் ராமதாஸ் உத்தரவிட்டால் தமிழ்நாடு தாங்காது - பாமக மாநில துணை பொதுச்செயலாளர் ராஜா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 31 March 2022

மருத்துவர் ராமதாஸ் உத்தரவிட்டால் தமிழ்நாடு தாங்காது - பாமக மாநில துணை பொதுச்செயலாளர் ராஜா.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  சுமார் 50க்கும் மேற்பட்ட பாமகவினர் தமிழக அரசுக்கு எதிராக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து மாநில துணை பொதுச் செயலாளர் ராஜா தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.


வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது, இதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தலை கருத்தில் கொண்டே இச்சட்டம் இயற்றப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடபட்டதால் மதுரை கிளை இட ஒதிக்கீடு சட்டத்தை ரத்து செய்தது


இதன் காரணமாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என கூறி கோரிக்கையை வைத்தது இந்த நிலையில்  இதனை விசாரித்த உத்தரவை உச்சநீதிமன்றம் வெறும் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தர முடியாது என உச்ச நீதிமன்றம் தமிழக அரசு மேல்முறையீடு செய்தை தள்ளுபடி செய்தது.


இதன் காரணமாக இன்று திருப்பத்தூரில் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் ராஜா தலைமையில் தமிழக அரசுக்கு எதிராக சுமார் 50க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாநில துணை பொது செயலாளர் ராஜா கூறுகையில் : கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின்தங்கி இருந்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வன்னிய குல இளைஞர்களை நக்சல்பாடிகளாகவும்,தீவிரவாதிகளாகவும் மாற்றிவிட வேண்டாம், நாங்கள் பிச்சை கேட்கவில்லை விகிதாச்சார அடிப்படையில் எங்கள் பிறப்புரிமையை தான் கேட்கிறோம். 


எனவே உடனடியாக தமிழக அரசும் மத்திய அரசும் கலந்தாய்வு செய்து சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி வன்னியகுல இடத்திற்கு ஒதுக்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டில் தீங்கு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


இல்லையென்றால் எதிர்காலத்தில் எங்கள் மருத்துவர் அய்யா ராமதாஸ் உத்தரவிட்டால் தமிழ்நாடு தாங்காது என எச்சரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad