நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி பரிதாப பலி!. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 March 2022

நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி பரிதாப பலி!.

நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்றபோது பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி பரிதாப பலி! 3 மணி நேரம் போராடி சடலமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கதிரிமன்கலம் கல்லுக் முனிசாமி வட்டம் பகுதியை சேர்ந்த அன்பு மகன் ராமு (14) இவர் அமிர்தா மெட்ரிகுலேஷன் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.


இந்த நிலையில் ராமு மற்றும் அவருடைய நண்பர்களான முரளிதரன் (14) மற்றும் மாதேஸ்வரன் (15) ஆகிய மூவரும் கலெக்டர் பங்களா பின்புறமுள்ள பெரியசாமி ஏரியில் இன்று மூவரும் விடுமுறை என்பதால் 12 மணியளவில் குளிக்க சென்றுள்ளனர்.


அப்போது ராமு மற்றும் ஏரியின் ஆழமான பகுதியில் குளிக்க சென்றதாக தெரிகிறது அதன் பின்னர் நீண்ட நேரம் ஆகியும் ராமு தண்ணீரில் இருந்து வெளியே வரவில்லை, அதன் பின்னர் இரு நண்பர்களான முரளிதரன் மற்றும் மாதேஸ்வரன் ஏரியில் தேடிக் கொண்டிருந்தனர்.


அப்போது ராமுவின் தந்தையின் அன்பு தனது மகன் நீண்ட நேரம் வீட்டிற்கு வராததால் மதியம் மூன்று அளவில் தேடிக்கொண்டு வந்த போது ஏரியின் அருகாமையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்மணியிடம் கேட்டுள்ளார் அப்போது  மூன்று பேரும் ஏரியில் குளிக்க சென்றுள்ளனர் என்று கூறியதன் பேரில் அன்பு அங்கே சென்று பார்த்தபோது இரண்டு நண்பர்கள் மட்டும் அங்கேயே அமர்ந்து இருந்தனர்.பின்னர் ராமு எங்கே என்று கேட்டுள்ளார்.


அப்போது ராமு ஏரியில் மூழ்கி மூன்று மணி நேரமாக வெளியே வரவில்லை என்று கூறியுள்ளனர் அதன் பேரில் தீயணைப்புத் துறையினருக்கு அன்பு தகவல் தெரிவித்துள்ளார் அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி ராமுவை சடலமாக மீட்டனர்.


பின்னர் சடலமாக மீட்கப்பட்ட ராமுவை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது 

No comments:

Post a Comment

Post Top Ad