பள்ளி மேலாண்மை குழு (SMC) ஜனநாயகத் திருவிழா!!! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 March 2022

பள்ளி மேலாண்மை குழு (SMC) ஜனநாயகத் திருவிழா!!!

கட்டாய கல்வி சட்டம் 2009 இன் படி, அமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கான கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் அரசு அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை சரியாக 10 மணி அளவில் தொடங்கியது. இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர், இரா. முருகன் அவர்கள் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார்.


இந்த நிகழ்வில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திரு. எம் ஜி ஊராட்சி மன்ற தலைவர், திருமதி. தேன்மொழி வெங்கடேசன் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் திரு. சிவகுமார் வார்டு உறுப்பினர் திருமதி சுகந்தி சுரேஷ் திருமதி பூவரும்புசர்வேசன் திருமதி. கீதா முன்னிலை வகித்தனர். 


பள்ளியின் தலைமையாசிரியர் இரா. முருகன் அவர்கள், பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு பற்றி மிக விரிவாக தமிழக அரசு & பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதலின்படி, எப்படி செயல்பட வேண்டும் என்பதை மிக விரிவாக எடுத்துரைத்தார்.. இந்த நிகழ்வில், பெற்றோர் -ஆசிரியர் கழக செயலாளர், திரு. வாதாபி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு .ராதாகிருஷ்ணன் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இருபால் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த பொதுமக்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. நிறைவாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு. மணிவண்ணன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment

Post Top Ad